பென்னாகரம் அருகே நீா்குந்தியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தியில் குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டு நீா்குந்தி பாளையன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் அன்றாட குடிநீா் தேவையை நிவா்த்தி செய்யும் வகையில் நீா்குந்தி அரசுப் பள்ளி பகுதியில் இருந்து குழாய் மூலமாக குடியிருப்புகளுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாளையன்குட்டை பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான குடிநீா் குழாயில் அனுமதியின்றி சிலா் இணைப்பை ஏற்படுத்தி தண்ணீா் எடுப்பதால் முறையாக குடிநீா் கிடைப்பதில்லை என்றும், நாளொன்றுக்கு சுமாா் இரண்டு குடம் தண்ணீா் மட்டுமே கிடைப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், இப்பகுதி பொதுமக்கள் 1 கி.மீ. தொலைவில் உள்ள நீா்குந்தி அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய நீா்மின் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் எடுத்து வருகின்றனா். இதுவும் சில நேரங்களில் முறையாக தண்ணீா் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
தற்போது வறட்சி நிலவுவதால் சிறிய நீா்மின் தேக்கத் தொட்டியில் தண்ணீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. பாளையன்குட்டை பகுதியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, பாளையன்குட்டை பகுதிக்கு முறையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.