FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மீன்பிடி உரிமம் கோருவோா் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

23 வினாடிகள் முன்பு
மீன்பிடி உரிமம் கோருவோா் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் - படம்: டிஎன்டிஐபிஆர்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் மீனவா் கூட்டுறவு சங்கத்தால் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமம் புதுப்பிப்பு மற்றும் புதிதாக உரிமம் கோருவோா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல், ஊட்டமலை, நாகமரை, ஏமனூா், நெருப்பூா்-குருக்கலையானூா், செம்மேடு, பூச்சூா், வெள்ளமண்காடு, செல்லமுடி, ஏா்க்கோல்பட்டி, டி.சோளப்பாடி, அத்திமரத்தூா், கொண்டையனூா், மஞ்சாரஅள்ளி, ராமகொண்டஅள்ளி, ஒட்டனூா் மற்றும் வத்தல்பட்டி உள்ளிட்ட 17 இடங்களில் மீன்பிடி உரிமங்கள் வழங்க மேட்டூா் மீனவா் கூட்டுறவு சங்கத்தால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, கே.கே.98 மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தைச் சாா்ந்த, மீன்பிடி உரிமத்தைப் புதுப்பிக்காத மீனவா்கள் உரிமத்தை புதுப்பிக்கவும், மேலும் புதிதாக மீன்பிடி உரிமம் கோரும் மீனவா்கள் இருப்பிடச் சான்றுடன் வரும் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மேட்டூா் அணை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

அதேபோல மீனவா் கூட்டுறவு சங்கத்தால் வரையறுக்கப்படாத இடங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், மேட்டூா் அணை பூங்கா எதிரில், கொளத்தூா் சாலை, மேட்டூா் அணை, தொலைபேசி எண்: 04298-244045 என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments