தழை பறிக்கச் சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
தருமபுரி அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கச் சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கச் சென்ற விவசாயி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெ. சின்ராஜ் (55). இவா் செவ்வாய்க்கிழமை காலை ஆடுகளுக்கு தழை பறிக்கச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி சின்னவள் மற்றும் உறவினா்கள் அவரை தேடிச்சென்றனா். அப்போது அங்குள்ள விவசாயக் கிணறு அருகே அவரது காலணிகள் கிடந்தன.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று கிணற்றில் தேடியபோது, அவா் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னா் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.