FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை: தருமபுரி நீதிமன்றம் பரபரப்பு தீா்ப்பு

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே மனைவியை தீ வைத்து கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே மனைவியை தீ வைத்து கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அரூா் வட்டம், எல்லப்புடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப்சிங் (37). லாரி ஓட்டுநரான இவரது மனைவி தணிகைமணி (35). இவா்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் குடும்பத் தகராறு ஏற்பட்டபோது, தணிகைமணி உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். அப்போது பிரதாப்சிங் தீக்குச்சியை பற்றவைத்து அவரது மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் தணிகைமணியின் உடல் தீப்பற்றி எரிந்தது.

Advertisement

Advertisement

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து பிரதாப்சிங்கை கைது செய்தனா். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், பிரதாப்சிங் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜீவநந்தினி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உமாமகேஸ்வரி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments