FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாகாது: உயர்நீதிமன்றம்

கணவர் விடுதலைக்கு எதிரான மனுவைத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி...

23 அக்டோபர் 2026, 5:45 pm
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ல் திருமணம் ஆன ஒரு தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்பதால் மனமுடைந்த மனைவி, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி, கணவரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இந்த தீர்ப்பை எதிர்த்து, பெண்ணின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், பெண்ணைக் காணவில்லை என, சகோதரர் அளித்த புகாரில், திருமணத்தை மீறிய உறவு பற்றி குறிப்பிட்டிருந்த போதிலும், வரதட்சணைக் கொடுமை குறித்து எதையும் குறிப்பிடவில்லை என்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வரதட்சணைக் கேட்ட குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, ஆரம்பக்கட்ட புகாரில் அது குறிப்பிடப்படாததால், பின்னரே சாட்சிகளால் அக்குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளதையும் கீழமை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, இந்திய தண்டனை சட்டம் 498A என்ற பிரிவின் படி மனைவிக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலாக கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதி, கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

summary

Having an affair with another woman cannot be treated as harassment under Section 498A: Madras HC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments