பெற்றோரைப் பிரிந்து கணவர் தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது...? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என மனைவி சொல்வது துன்புறுத்தலுக்கு சமம் என நீதிமன்றம் உத்தரவு
ஒரே மகனாக இருக்கும் நிலையில், பெற்றோரை விடடுவிட்டு, தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று கணவரை, மனைவி வற்புறுத்துவது துன்புறுத்தலுக்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவன் - மனைவி என்பவர்கள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும், கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கணவர் தொடர்ந்த விவாகரத்துக்கு அனுமதிக்கும் குடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெண் மேல்முறையீடு செய்த நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
Advertisement
Advertisement
மேலும், குறிப்பிட்ட கணவர், தன்னுடைய பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்கும் போது, சொந்த வீட்டில் வாழுகிறார். அப்படியிருக்கையில், பெற்றோரை விட்டுவிட்டு, தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று மனைவி வற்புறுத்துகிறார். ஆனால், எந்தக் காரணமும் இன்றி, அந்த மனைவி தன்னுடைய பெற்றோர் வீட்டில்தான் வாழ்கிறார். ஆனால் இந்த தாம்பத்ய உறவு என்பது, பரஸ்பர புரிதல், விட்டுக்கொடுத்தல், காதலின் அடிப்படையில்தான் உருவாகிறது.
மேலும், அடிக்கடி, தன் மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுவது, அவரது கணவரின் மனதில் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது, அடிக்கடி சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்குச் செல்வது தற்காலிகமாக இருந்தாலும்கூட, எந்தக் காரணமும் இன்றி, தேவையே இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறுவதால், கணவருக்கு, எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய மனைவி தன்னை விட்டுவிட்டு பிரிந்துச் செல்லக் கூடும் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே, தன்னுடைய கணவர், பெற்றோருக்கு ஒரே மகன் என்பதையும், அவர்களை இவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நன்கறிவார். பிறகு, திருமணமானதும் பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று வற்புறுத்துவது துன்புறுத்தலுக்கு சமம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.