FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திருமணம் குறித்து மனம் திறந்தார் சாரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?

திருமணம் குறித்து மனம் திறந்திருக்கிறார் சாரா டெண்டுல்கர், அவரது வருங்கால கணவர் பற்றியும்...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:14 pm IST
சாரா டெண்டுல்கர் - ஏஎன்ஐ
பகிர்:

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகத் திகழும் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர், காதல், உறவு, வருங்கால வாழ்க்கைத் துணை குறிதது மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தனது வருங்கால கணவரிடம்தான் மிகவும் எதிர்பார்க்கும் பண்புகள் குறித்து சாரா டெண்டுல்கர் பேசியிருப்பதே ஒரு அழகிய கவிதை போல இருக்கிறது.

ஆங்கில இதழ் ஒன்றுக்கு சாரா டெண்டுல்கர் அளித்த நேர்காணல்தான் இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தனது எதிர்காலம், திருமண வாழ்க்கை, தான் எத்தகைய உறவை விரும்புகிறேன் என்பதற்கு எல்லாம் எனது பெற்றோருக்கு இடையே இருக்கும் ஆழமான நட்பும் அவர்களுக்கிடையிலான சிறந்த புரிதலும் உதாரணமாக திகழ்வதாக சாரா குறிப்பிட்டிருக்கிறார்.

உடல்நலம் சார்ந்த தொழில்முனைவோராகவும், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகத் திறமையுடன் விளங்கும் 28 வயது சாரா, தன்னுடைய பெற்றோரான சச்சின் - அஞ்சலி இடையேயான நட்பும் கிண்டலும் எப்போதும் அவர்கள் ஒருவரை ஒருவர் கேலி-கிண்டல் செய்துகொண்டே அன்பாக இருப்பார்கள் என்பதைத் தெரிவித்தார்.

அவர்களது அன்பு மற்றும் காதலை பார்த்துக் கொண்டே வளர்ந்ததாலோ என்னவோ, வாழ்க்கைத் துறை, உறவு, தோழமை குறித்து தன்னுடைய கண்ணோட்டம் மிக அழகாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

என் பெற்றோர் எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த நண்பர்கள். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் கலகலப்பான உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என் வருங்காலத் துணையிடமும் நான் நிச்சயமாக அதைத்தான் விரும்புவேன்" என்று சாரா கூறியிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர், மிகவும் புகழ் உச்சியில் இருந்தாலும், ஊடகங்களின் வெளிச்சப் பார்வையிலிருந்து தன்னுடைய அழகிய குடும்ப வாழ்வை அவர் ஒளித்தே வைத்திருந்தார். தற்போது சாரா மூலமாகத்தான் அவர்களது அன்பான அழகிய வாழ்க்கைப் பற்றி லேசாக ஊடகக் காதுகளுக்கு விழுந்திருக்கிறது. தன்னுடைய பெற்றோரின் வெற்றிகரமான திருமண வாழ்வுக்கு, நட்புதான் மிகவும் முக்கியமாக அமைந்திருந்தது என்று சாரா நம்புகிறார். அதையே அவரது பேச்சும் வெளிப்படுத்துகிறது.

வெறும் எதிர்பார்ப்புகள் மற்றும் வயது போன்ற காரணங்களுக்காக மட்டும் திருமண பந்தத்தில் நுழைவதற்கு அவசரப்படவே கூடாது என்று அவர் தெளிவாக இருக்கிறார்.

ஜென் ஸீ மற்றும் திருமணம் குறித்து அதே வெளிப்படைத் தன்மையுடன் பேசியிருக்கும் சாரா, தற்போதைய இளம் தலைமுறையினர் உறவு என்பதை வித்தியாசமாக அணுகுகிறார்கள். ஜென் ஸீ இளைஞர்கள், நட்பு அல்லது உறவில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்றாலும் அதிலிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் எந்த சிரமமும் அடைவதில்லை.

சிலரைப் பார்க்கிறேன், திருமணம் செய்ய நிச்சயம் நடக்கிறது, திருமணத்துக்கான ஏற்பாடுகளும், அதற்கு இடையே அவர்களுக்குள் ஒத்துவராது என்றுகூறி திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுகிறார்கள்.

தலைமுறையினருக்கு இடையே, உறவு குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருக்கும் வேறுபாட்டை சாரா பேச்சு வெளிப்படுத்துகிறது.

முந்தைய தலைமுறையினர், தங்களைச் சார்ந்து ஒரு முடிவெடுக்க பயந்தனர். ஆனால், ஜென் ஸீக்கள் அப்படியில்லை, அவர்கள் ஏதேனும் தவறாக போகும்போது உடனடியாக நம்பிக்கையுடன் முடிவெடுக்கிறார்கள் என்கிறார்.

summary

Sara Tendulkar opens up about marriage! Who will be her future husband?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments