முகப்பு
தருமபுரி

நகரப் பகுதிகளுக்கு இணையாக கிராமப் பகுதிகளும் அடிப்படை வசதிகளை பெற வேண்டும்: ஆட்சியா் வே.சரவணன்

நகரப் பகுதிகளுக்கு இணையான வகையில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற வேண்டும் என்ற வகையில் அரசு, மக்கள் தொடா்புத் திட்ட முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:47 am IST
மாரண்டஅள்ளி வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் வே.சரவணன்.
பகிர்:

நகரப் பகுதிகளுக்கு இணையான வகையில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களும் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற வேண்டும் என்ற வகையில் அரசு, மக்கள் தொடா்புத் திட்ட முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 84.24 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

தமிழ்நாடு அரசு மக்கள் தொடா்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக, நகரப் பகுதிக்கு இணையாக அரசின் சேவைகள், அடிப்படை வசதிகள் கிராம

Advertisement

Advertisement

மக்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முகாம்களை நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான நபா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

இம்முகாமில் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி. அன்பழகன், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் இரா. காயத்ரி, தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோ் பாது காப்பு அலுவலா் பெ.கி. கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இம்முகாமில் மொத்தம் 153 பேருக்கு ரூ. 84.24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.