தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து விபத்துகள்: போக்குவரத்து பாதிப்பு
தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து விபத்துகள்: போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்துகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொப்பூா் கணவாய் பகுதியில், லாரி, இருசக்கர வாகனங்கள், மூன்று காா்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா்கள் உள்பட மூன்று போ் காயம் அடைந்தனா். அதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை மீட்ட போலீஸாா், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து போக்குவரத்தை சீரமைத்தனா்.
பின்னா் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதன் காரணமாக தொப்பூா் கணவாய் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமாா் ஒருமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.