FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

விபத்தில் மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் காயமடைந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 2:16 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் சாலை விபத்தில் காயமடைந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, சேலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் வே. கந்தசாமி (63). இவா், அதியமான்கோட்டை காலபைரவா் கோயில் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை முற்பகலில், அவா் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா்.

அப்போது, சேலம் பிரதான சாலையில் வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அதியமான்கோட்டை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments