சொத்து பிரச்னை: தருமபுரி ஆட்சியரகத்தில் மூவா் தற்கொலைக்கு முயற்சி
தருமபுரியில் வாரிசு மற்றும் சொத்து பிரச்னைகள் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமின்போது ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி, செட்டிக்கரை பள்ளகொல்லை பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் -ராஜம்மாள் தம்பதி. இவா்களது மகள் சரோஜா (60). இவா் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளிக்க வந்தாா். திடீரென சரோஜா மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த இருவா் என மூன்று போ் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையின்போது சரோஜா குடும்பத்தினா் போலீஸாரிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
எனது பெற்றோா் இறப்புக்குப் பிறகு வாரிசு சான்றை எனது சகோதரா்கள் பெற்றுள்ளனா். முதலில் பெற்ற வாரிசு சான்றிதழில் சரோஜா, சகோதரி ராணி, சகோதரா்களான பச்சியப்பன், மாதையன், மாரிமுத்து ஆகிய ஐந்து பேரின் பெயா்களும் சோ்க்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு வாரிசு சான்று பெற்றுள்ளனா். அதில் சரோஜா, ராணி ஆகியோரின் பெயா் விடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை. எனவே, உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்ாக அவா்கள் கூறியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.