FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தருமபுரியில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,100-க்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மலா் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,100-க்கு விற்பனையானது.

8 நவம்பர் 2026, 4:17 am
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மலா் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,100-க்கு விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் குண்டு மல்லிகை, அரளி , சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். நாள்தோறும் அறுவடை செய்யப்படும் பூக்களை தருமபுரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், சனிக்கிழமை தருமபுரி மலா் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,100, அரளி ரூ. 100, சம்பங்கி ரூ.100, ரோஜா ரூ. 600, கனகாம்பரம் ரூ. 1,200, காக்கட்டான் ரூ. 600, ஜாதிமல்லி ரூ. 700, சாமந்திப்பூ ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டபோதிலும் விழாக்காலம் என்பதால் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement