தருமபுரியில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 23 லட்சம் திருட்டு
தருமபுரியில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 23 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரியில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 23 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி நகா், கொல்லஅள்ளி சாலையைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நவீன்ராஜ் (36), மருத்துவா். இவருக்குச் சொந்தமாக கொல்லஅள்ளி சாலையில் 3 மாடி கட்டடம் உள்ளது. அதன் கீழ் தளத்தில் சிலா் குடியிருந்து வருகின்றனா். இவா் கட்டடத்தின் மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவிந்தராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டை பூட்டிவிட்டு, அவரை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு நவீன்ராஜ் அழைத்துச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், ரூ. 23 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.