FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பள்ளி வாகனத்தில் சிக்கி எல்கேஜி மாணவா் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய 4 வயது எல்கேஜி மாணவா், அதே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

11 நவம்பர் 2026, 2:04 am
- பிரதிப் படம்
பகிர்:

பாலக்கோடு அருகே பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய 4 வயது எல்கேஜி மாணவா், அதே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மகன் தருண் (4). வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவா்கள் பள்ளி வாகனத்தில் வீடுதிரும்பினா். வாகனத்தை சரவணன் (27) ஓட்டிச் சென்றாா். நடத்துநா் பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மாதம்பட்டி நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் மாணவா்களை இறக்கிவிட்ட ஓட்டுநா், வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளாா். அப்போது, வாகனத்தில் இருந்து இறங்கிய தருண் மீது பள்ளி வேன் மோதியது. மேலும், அதன் சக்கரத்தில் சிக்கி மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பாலக்கோடு போலீஸாா் சிறுவனின் உடலை கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.