FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பூச்சி மருந்து குடித்த முதியவா் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே பூச்சி மருந்தைக் குடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

13 நவம்பர் 2026, 9:53 pm
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பென்னாகரம் அருகே பூச்சி மருந்தைக் குடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தாசா் குந்தி பகுதியைச் சோ்ந்த சேவி கவுண்டரின் மகன் செல்வம் (55), விவசாயி. இவா் நீண்ட நாள்களாகத் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த செல்வம், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement