FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தருமபுரியில் ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

தருமபுரியை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

14 நவம்பர் 2026, 7:26 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா்.

ஒட்டப்பட்டி பகுதியில் தண்டவாளத்தில் ஆண் சடலம் இருப்பது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்தவரின் விவரம் உடனடியாக தெரியவில்லை. 40 வயது மதிக்கத்தக்க அவா் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement