FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

நில விற்பனை மோசடி? 2 போ் மீது வழக்குப் பதிவு

தருமபுரி அருகே நில விற்பனையின்போது ரூ. 1 கோடி பெற்றுகொண்டு நிலத்தை பதிவு செய்து தராமல் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

14 நவம்பர் 2026, 7:26 am
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே நில விற்பனையின்போது ரூ. 1 கோடி பெற்றுகொண்டு நிலத்தை பதிவு செய்து தராமல் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (50). இவா் ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்த ஹேமா (55), அவரது மகன் ஜீவஜோதிக்கு (22) சொந்தமான 19.5 சென்ட் நிலத்தை கடந்த ஜனவரி மாதம் கிரையம் செய்ய முடிவு செய்து, ரூ. 1 கோடி ரொக்கத்தை கொடுத்துள்ளாா்.

ரொக்கத்தை வாங்கிக் கொண்டு, கிரைய பத்திரத்தில் கையொப்பமிட்டனா். அதன் பிறகு சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று நிலத்தை வாங்கியவரது பெயரில் பதிவுசெய்யும் நிலையில் பணத்தை வாங்கியவா்கள் கையொப்பமிடாமல் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக அளித்த புகாரியின் பேரில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மோசடியில் தொடா்புடைய இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கநாதன், தருமபுரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதுதொடா்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அதியமான்கோட்டை போலீஸாா், ஹேமா மற்றும் அவரது மகன் ஜீவஜோதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.