FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

சிறுமி பலாத்காரம்: இளைஞா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு

17 நவம்பர் 2026, 2:25 am
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் சிறுமி கா்ப்பமான சம்பவம் தொடா்பாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியும், அமுதன் (24) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை மொரப்பூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா் . அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக சிறுமியின் தாய் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் அமுதன் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.