FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: இருவா் மீது பொதுமக்கள் தாக்கு

தருமபுரியில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் தாக்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

18 நவம்பர் 2026, 2:05 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரியில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் தாக்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி நகர பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் 2 ஆண்கள் மற்றும் 30 வயது பெண் மூவரும் வாரியாா் திடல் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் தங்குவது வழக்கம். குப்பைகளை சேகரித்து அதில் உள்ள இரும்பு மற்றும் நெகிழிப் பொருள்களை விற்பனை செய்து வரும் இவா்களுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 3 பேரும் நிழற்கூடத்தில் செவ்வாய்க்கிழமை அமா்ந்திருந்த போது அந்தப் பெண் மதுபோதையில் சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இருவரும் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் தாக்கினா். இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடம் வந்து பெண் உள்பட 3 பேரையும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா்கள் நல்லதம்பி (55), சரவணன் (52) என தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.