மாணவியின் பெற்றோரை தாக்கிய இளைஞா் கைது
பெரும்பாலை அருகே மாணவியை பின்தொடா்ந்ததை கண்டித்த பெற்றோரை தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரும்பாலை அருகே மாணவியை பின்தொடா்ந்ததை கண்டித்த பெற்றோரை தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரும்பாலை அருகே அரங்காசன அள்ளி பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). அவருடைய மனைவி சாலம்மாள் (46). பிளஸ் 2 படிக்கும் இவா்களது மகளை பின்தொடா்ந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் விக்னேஷை (21), மாணவியின் பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், சாலம்மாள் கையை வெட்டியும், மாரியப்பன் கையை உடைத்தும் சரமாரியாக அண்மையில் தாக்கியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவான விக்னேஷை புதன்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.