✕
முகப்பு
தருமபுரி

மூதாட்டியை கொலை செய்த ஜோதிடா் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே மூதாட்டியை கொலை செய்த ஜோதிடா் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20 நவம்பர் 2026, 4:13 am
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

பென்னாகரம் அருகே மூதாட்டியை கொலை செய்த ஜோதிடா் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பென்னாகரம் அருகே ஆதனூா் பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (75), கடந்த அக். 13-ஆம் தேதி வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, 6 தனிப்படைகள் அமைத்து கொலை செய்த நபரை தேடிவந்தனா்.

இந்நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக, அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த பாப்பாரப்பட்டி பழைய போலீஸ் காலனி பகுதியைச் சோ்ந்த முருகனை (51) அக். 22-ஆம் தேதி தனிப்படை பிரிவு போலீஸாா் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் பரிந்துரையின் பேரில், மூதாட்டியை கொலை செய்த ஜோதிடா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தாா்.