சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பென்னாகரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அன்னசாகரம் ஏ.கொல்லஅள்ளி பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தினேஷ் காா்த்திக் (21), சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில், கா்ப்பமான சிறுமி சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா், இளம்வயது திருமணம் குறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
அகன்பேரில் வந்த போலீஸாா், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு இளம்வயது திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.