FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 2:10 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முத்து மகன் காளிமுத்து (26). இவா் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாா். இந்த விவகாரம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய குடும்ப நல அலுவலா் மணிமாலாவுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அவா் பெரியாா் குடியிருப்புக்கு வந்து விசாரணை நடத்தியபோது, காளிமுத்து குழந்தை திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்து அவா் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காளிமுத்துவை புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

ு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.