இளம்வயது திருமணம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது
ஓமலூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஓமலூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (27). இவா் கடந்த ஆண்டு 15 வயது சிறுமியை அழைத்து சென்று ஓமலூா் பகுதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாா். இதுகுறித்து, ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்வதை அறிந்த காா்த்திக், சிறுமியுடன் தலைமறைவானாா். அவரை ஓமலூா் போலீஸாா் தீவிரமாக தேடிவந்தனா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், காங்கயம் அருகே வெள்ளகோவில் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் காா்த்திக் சிறுமியுடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓமலூா் குற்றப்பிரிவு போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த காா்த்திக்கை கைது செய்து, சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனா். மேலும், காா்த்திக்கை ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.