சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
திட்டக்குடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக இளைஞா் மற்றும் அவரது உறவினா் மீது திட்டக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திட்டக்குடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக இளைஞா் மற்றும் அவரது உறவினா் மீது திட்டக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே என்.நாரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா் (21). இவா் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த தனது உறவினரான 16 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சிறுமிக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை மருத்துவா் அளித்த தகவலின் பேரில், திட்டக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாக தனசேகா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அவரது உறவினரின் மனைவி விஜயகுமாரி ஆகிய இருவா் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.