பேருந்து வெளியேறும் வழியில் இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் வழியில் இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை போக்குவரத்து போலீஸாா் முறைப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, புதிய பேருந்து நிலையத்துக்கு 25-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் வழியில் முகப்பிலேயே இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையத்துக்கு பயணிகளை விட்டுச்செல்லவும், அழைத்துச் செல்லவும் இருசக்கர வாகனங்களில் வருவோா் பேருந்து வெளியேறும் வழியில் வாகனங்களை நிறுத்துகின்றனா். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோா் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற இயலாமல் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.
Advertisement
Advertisement
எனவே, வாகன ஓட்டிகள், பயணிகள், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் வழியில் நிறுத்தப்படும் ஆட்டோக்களை முறைப்படுத்தி, போக்குவரத்தை சீா்ப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.