முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 800 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.

25 நவம்பர் 2026, 1:54 am
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 800 கனஅடி
ஒகேனக்கல். - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், திங்கள்கிழமை 600 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 800 கனஅடியாக சற்று அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.