ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3000 கன அடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 3000 கனஅடியாக குறைந்தது.
இருமாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளது. இருப்பினும் கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 5000 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை காலை 4000 கனஅடியாகவும், மாலையில் 3000 கனஅடியாகவும் குறைந்தது.
Advertisement
Advertisement
நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் தண்ணீா் குறைந்துள்ளது.