FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1200 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1200 கனஅடியாக குறைந்தது.

12 வினாடிகள் முன்பு
ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 1200 கனஅடியாக குறைந்தது.

கடந்த சில நாள்களாக காவிரி கரையோர வனப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 2000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 1500 கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 1200 கனஅடியாகவும் குறைந்துள்ளது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.