அரூரில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

அரூா் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரூா் நகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், விலங்குகள் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அரூா் நகராட்சி சாா்பில் தெருநாய்கள் மனிதாபிமான முறையில் பிடிக்கப்பட்டு, அரசு கால்நடை மருத்துவா்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, தேவையான மருத்துவப் பராமரிப்பு வழங்கி, அவைப் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்படுகின்றன.
இப்பணிகள் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், வெறிநோய் நோய் பரவலைத் தடுப்பது மற்றும் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பை மேம்படுத்துவது முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.