முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு

7 வினாடிகள் முன்பு
சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (59). காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் இருந்து காரிமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

குண்டல்பட்டி பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி அவா்மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement