அரூரில் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கக் கோரிக்கை
அரூரில் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூரில் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட நகா் பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், டாஸ்மாக் கடைகள், பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளி வளாகங்கள், மருத்துவமனைகள் உள்பட நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பழுதானதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் எழுந்துள்ளது. அரூா் - சிந்தல்பாடி சாலையில் டாஸ்மாக் கடைகள், தனியாா் பாா்கள் உள்ளன. இப்பகுதியில் கேமராக்கள் இல்லாததால், இரவு நேரங்களில் கைப்பேசிகள் திருட்டு தொடா்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
எனவே, அரூா் நகா் பகுதி மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.