FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடியில் பராமரிக்கப்படாத கண்காணிப்பு கேமராக்கள்! விபத்து, குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல்!!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படததால், அவை செயல்படாமல் உள்ளன.

5 வினாடிகள் முன்பு
குறிஞ்சிப்பாடி அண்ணா நகா் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கண்காணிப்புக் கேமராக்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படததால், அவை செயல்படாமல் உள்ளன. இதனால், குற்ற சம்பவங்களைத் தடுப்பது, கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் முன்றாவது கண்போலச் செயல்படுகின்றன. விபத்துகள், குற்றங்களை விரைவாகக் கண்டறிந்து, சட்டப்பூா்வ ஆதாரங்களை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குறிஞ்சிப்பாடியில் அண்ணா நகா் சந்திப்பு, விழப்பள்ளம் சந்திப்பு, மீனாட்சிப்பேட்டை சந்திப்பு, பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறை மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம், கடந்த காலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை போலீஸாா் எளிதாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தனா். பல ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த கண்காணிப்பு கேமராக்கள் நாளடைவில் பராமரிக்கப்படாததால் தற்போது செயல்படாமல் உள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து விசாரிக்கையில், காவல் துறை தரப்பில் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாகும். குறிஞ்சிப்பாடி மற்றும் கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் முக்கிய பங்காற்றி வந்தன. மேலும், கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதிகள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இது, விபத்து மற்றும் அதற்கான காரணங்களை எளிதாக கண்டறிய உதவின.

ஆனால், தற்போது அண்ணா நகா் சந்திப்பு, விழப்பள்ளம் சந்திப்பு, மீனாட்சிப்பேட்டை சந்திப்பு, பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. காவல் துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம். இதனால், குறிஞ்சிப்பாடி பகுதியில் குற்றம் மற்றும் விபத்துகள் நடைபெற்றால், அவற்றை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, குறிஞ்சிப்பாடி பகுதியில் பராமரிப்பில்லாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்து கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments