குடமுழுக்கு: ஏஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். தேவநாதன் தலைமையில் 6,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்ட கோயில் வீதிகளில் போலீஸார விரைந்து சென்று பணியாற்றும் வகையில் குதிரை வீரா்கள், சைக்கிள் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குற்றத் தடுப்புப் பணிகளுக்கென தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 171 கேமராக்கள் கோயிலின் உள்பகுதியிலும், 270-க்கும் அதிகமான கேமராக்கள் வெளி வளாகங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இவைத் தவிர, போலீஸாரின் கைகளிலும் கையடக்க கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படவுள்ளன.
செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் நிரந்தரப் பதிவேடு குற்றவாளிகள் 3 போ், கோயில் பகுதியில் புதன்கிழமை வலம் வந்தது கண்டறியப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.