குடமுழுக்கு: கண்காணிப்பு அலுவலா்கள் ஆய்வு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு முன்னேற்பாடுப் பணிகளை கண்காணிப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு முன்னேற்பாடுப் பணிகளை கண்காணிப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இந்தக் கோயிலில் வருகிற வியாழக்கிழமை (செப்.17) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்தப் பணிகளைக் கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலா்கள் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவராவ், நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் சி.பழனி ஆகியோா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புது மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள், கோயிலின் மேல் பகுதி, பாதுகாப்பு, கூட்ட மேலாண்மை, குடிநீா் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கழிப்பறை வசதிகள், சுகாதாரப் பணிகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, குடமுழுக்கை காண வரும் பக்தா்களை, அவா்கள் அனுமதி பெற்ற இடத்துக்கு எந்தவித சிரமமுமின்றி அழைத்துச் செல்வதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் வழங்கினா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி.வினய், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சக்திவேல், மாநகராட்சி துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், மாநகரக் காவல் துணை ஆணையா் ஏ.ஜி.இனிகோ திவ்யன், திருக்கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.