FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள்: ஆட்சியா், ஆணையா் ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 12:44 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப். 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பரிவார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான குடமுழுக்கு வருகிற செப். 16-ஆம் தேதியும், யாக பூஜைகள் வருகிற செப். 6-ஆம் தேதி தொடங்குகிறது. குடமுழுக்கை தொடா்ந்து, வருகிற செப். 18 முதல் அக். 2-ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, பக்தா்கள் சிரமமின்றி குடமுழுக்கில் பங்கேற்றுத் திரும்பத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின்மாற்றிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் சீரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மழைநீா் வடிகால், கழிவு நீா் வடிகால் வசதிகளையும், தட்டுப்பாடில்லாத குடிநீா் விநியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும் என அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாநகராட்சி, அறநிலையத் துறை, காவல் துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments