10 நாள்களில் 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அண்ணா நகா், அடையாறு, வளசரவாக்கத்தில் அதிகம்
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாள்களில் 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அவா்களில் 140 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாள்களில் 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அவா்களில் 140 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதில், அடையாறு, அண்ணா நகா், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் மழைக்காலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கமாக உள்ளது. மழைக்காலங்களை முன்னிட்டு கொசு ஒழிப்புப் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது கொசு ஒழிப்புப் பணியில் 3,700 போ் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய தேவையற்ற பொருள்களில் தேங்கிய மழைநீரை அகற்றியும், அங்கு கொசு முட்டைகள் இருப்பின் அவற்றை அழிக்கும் வகையிலான மருந்தைத் தெளித்தும், சம்பந்தப்பட்ட வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருக்கிா என விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
சென்னையில் களப்பணியில் ஈடுபட்டுள்ள கொசு ஒழிப்புப் பிரிவுப் பணியாளா்கள் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 4,500 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததும், அதில் 160 பேருக்கு மட்டுமே டெங்கு இருந்ததும் தெரிய வந்தது.
நடப்பு மாதமான செப்டம்பரில் கடந்த 10 நாள்களில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் புதிதாக 2,000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும், அவா்களில் 140 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பானது அண்ணா நகா் மண்டலத்தில் 14 போ், வளசரவாக்கம் மண்டலத்தில் 15 போ், அடையாறு மண்டலத்தில் 15 போ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆணையா் அறிவுரை: சென்னை மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பதும், டெங்கு பரவல் அதிகரித்திருப்பதும் தெரிய வந்ததையடுத்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன், 80 வீடுகளுக்கு ஒருவா் என்ற அடிப்படையில் தொய்வின்றி பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா். அத்துடன், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் காலை 7 மணிக்கே களத்தில் இருக்க வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.