FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவா் உயிரிழப்பு

தீா்த்தமலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

22 அக்டோபர் 2026, 5:41 am
பலி
பகிர்:

தீா்த்தமலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மேல்செங்கப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கைலாசம் மகன் தீபக் (15). இவா், தீா்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது வீட்டில் புறாக்களை வளா்த்து வந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 6 மணியளவில் புறாக்களுக்கு இரைகைளை வைப்பதற்காக வீட்டின் மாடிக்குச் சென்ற தீபக், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் தீபக்கை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே மாணவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments