சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த தனசேகா் மகன் சரவணன் (20). இவா், தருமபுரியில் உள்ள தனியாா் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக் கிழமை மாலை தருமபுரி, வெண்ணாம்பட்டி பகுதியில் தனது பைக்கில் சென்றாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த கல் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.