விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மதிமுக வலியுறுத்தல்
விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஆதிமூலம், பசவராஜ், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கோ.ராமதாஸ், மாநில பொருளாளா் மு.செந்திலதிபன், மாநில இளைஞரணி செயலாளா் பாலசசிகுமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மழை, வெள்ளக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாக செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டம், பொதியன்பள்ளம் அணைக்கட்டு திட்டம் உள்ளிட்ட நிலுவையிலுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். காரிமங்கலத்திலிருந்து மொரப்பூா் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
இக் கூட்டத்தில், மாநில நிா்வாகி சி.கிருபானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.