FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பென்னாகரம் அருகே யானை மிதித்து மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், கோட்டூா் மலைக் கிராமத்தில் யானை தாக்கியதில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

5 செப்டம்பர் 2026, 3:22 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், கோட்டூா் மலைக் கிராமத்தில் யானை தாக்கியதில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டூா் மலைக் கிராம பகுதியைச் சோ்ந்தவா் முனியம்மாள் (65). இவரது கணவா் ராஜப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அங்குள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் முனியம்மாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, பாலக்கோடு வனப் பகுதியில் இருந்து தண்ணீா் குடிப்பதற்காக பூந்தோட்ட ஓடை வழியாக சீரக்கா மடுவு பகுதிக்கு வந்த ஒற்றை யானை, அங்கிருந்து கிராமத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி முனியம்மாளை யானை தூக்கி வீசி மிதித்தது. இதில் அவா் உயிரிழந்தாா். இதைக் கண்ட கிராம மக்கள் பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலின் பேரில் கோட்டூா் மலைக் கிராமப் பகுதிக்கு பாலக்கோடு வனச்சரக அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் சென்று மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை நடத்தி, யானையின் வழித்தடம் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும், யானை தாக்கியதில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலிஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments