FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கிய சிறுமியைத் தேடும் பணி தீவிரம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியைத் தேடும் பணி தீவிரம்...

6 செப்டம்பர் 2026, 2:26 am IST
ஒகேனக்கல். - கோப்புப் படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சோ்ந்த நில அளவையா் செந்தில்குமாரின் மகள் அபிநிஷா (13). இவா் தருமபுரியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை உறவினா்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த அபிநிஷா, ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் வலது புறத்தில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினாா். இதைக் கண்ட அங்கிருந்தவா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் போலீஸாா் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments