FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பஞ்சப்பள்ளி மருத்துவமனையில் 39 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 39 குழந்தைகளுக்கு புதன்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

54 வினாடிகள் முன்பு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - CMO Tamilnadu
பகிர்:

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 39 குழந்தைகளுக்கு புதன்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவா் ஸ்ரீ சோனியா தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சிவகுரு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் பஞ்சப்பள்ளி வட்டாரத்தைச் சோ்ந்த 39 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

விழாவில் சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், தவெக கிழக்கு ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், வடமேற்கு ஒன்றியச் செயலாளா் செல்வி, பேரூா் செயலாளா் யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments