FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மார்ச் 13-இல் முன்னாள் முப்படை வீரர்கள் குறைதீர் முகாம்

கிருஷ்ணகிரியில் மார்ச் 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரியில் மார்ச் 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மணிவண்ணன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி டான் பாஸ்கோ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வரும் 13-ஆம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரையில் முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

தென்னிந்திய ஜெனரல் ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்வீர்சிங் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், வெலிங்டன், மெட்ராஸ் ரெஜிமென்டல் மைய கமாண்டன்ட் பிரிகேடியர் சங்வான், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த முகாமின் போது, இலவச மருத்துவ முகாம், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் ஆலோசனை, தகுதியுடையவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன் முகாமில் பங்கேற்பவர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இலவச பேருந்து வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முகாமில் அனைத்து முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

பர்கூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வரமலைகுண்டா அரசுப் பள்ளியில் அண்மையில் ஆண்டு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்துக்குள்பட்ட ஆந்திர மாநில எல்லையில் உள்ள வரமலைகுண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கிராம கல்விக் குழுத் தலைவர் சாமந்தன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் வேதா, ஜோஸ்பின், பள்ளி தலைமை ஆசிரியர் குளோரியா இசபெல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments