கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பணம் திருடிய வடமாநிலத்தவர் கைது
பர்கூரில் கோழிப் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 48 ஆயிரத்தைத் திருடிய வட மாநிலத்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பர்கூரில் கோழிப் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 48 ஆயிரத்தைத் திருடிய வட மாநிலத்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஜிட்டோபனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (28). கோழிப்பண்ணை உரிமையாளரான இவர், கோழி விற்பனை செய்த பணம் ரூ. 48 ஆயிரத்துடன், பர்கூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் பணத்தைத் திருடி அங்கிருந்து தப்ப முயன்றார். பணம் திருடப்பட்டதை உணர்ந்த ரிஸ்வான், கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் பணத்தைத் திருடிய இளைஞரை பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் ஒடிசா மாநிலம், கோபிந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதிசுந்தர்பெக்ரா (31) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து திருடிய ரூ. 48 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.