தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து 7-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த சனிக்கிழமை பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
Advertisement
Advertisement
ஆனால், சிஜேபி போராட்டத்தில் மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு மத்தியில், வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தொடர் அமளி காரணமாக மசோதா மீதான விவாதம் நடத்தாமல் நேற்று நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Uproar continues - Parliament stalled for the 7th day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.