அரசம்பட்டியில் மின் இணைப்பை துண்டித்த மர்ம நபர்கள்
அரசம்பட்டியில் உள்ள மின் மாற்றியின் இணைப்பை மர்ம நபர்கள் நிறுத்தியதால் நீண்ட நேரம் மின் இணைப்பு இல்லாமல் அரசம்பட்டி மற்றும்
அரசம்பட்டியில் உள்ள மின் மாற்றியின் இணைப்பை மர்ம நபர்கள் நிறுத்தியதால் நீண்ட நேரம் மின் இணைப்பு இல்லாமல் அரசம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், சிறு தொழில் பட்டறைகள் அவதிக்குள்ளாகினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அரசம்பட்டி சந்தை மைதானம் முன்பு உள்ள மின் மாற்றியை மர்ம நபர்கள் நிறுத்திவிட்டு சென்றனர். நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வழங்கப்படாததால், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மின் வாரிய ஊழியர்கள் பல இடங்களில் மின் பாதையை சரிபார்த்த பிறகு மின் இணைப்பை வழங்கினர். சமூக ஆர்வலர் மு.இராமகிருஷ்ணன் கூறுகையில், அரசம்பட்டி புலியூர் போன்ற பகுதிகளில் அடிக்கடி மின் மாற்றியை நிறுத்திவிட்டு மின்சாரத்தை திருடுவதற்காக இணைப்பு ஏற்படுத்துகின்றனர். எனவே, மின் மாற்றிகளுக்கு மின் வாரியத்தினர் பூட்டு போட்டு பாதுகாக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.