FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள் 9 பேர் பதக்கம்: அமைச்சர் பெருமிதம்

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற 30 பேரில் 9 பேர் பதக்கங்களை

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற 30 பேரில் 9 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணாரெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் பா. பாலகிருஷ்ணாரெட்டி பேசியது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த நிதியாண்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ. 200 கோடி நிதி வழங்கி உள்ளது. அதேபோல், சர்வதேச போட்டியில் பங்கேற்ற 152 வீரர்களுக்கு ரூ. 17.2 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 30 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இதில், 9 பேர் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  பதக்கங்களை வென்றவர்களுக்கு மொத்தம் ரூ. 2 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் அளித்துள்ளார். வேலைவாய்ப்பில் 2 சதவீத உள்ஒதுக்கீடும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். 
இந்நிகழ்ச்சியில், தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்ற கிருஷ்ணகிரி அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் உள்ளிட்டோரை அவர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments