ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்துக் குறைவு
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளும்
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளும் குறைந்து புதன்கிழமை காலை நொடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீரின் அளவுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்த தண்ணீர்,புதன்கிழமை காலை 8 மணியளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாகக் குறைந்து, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 52-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.