FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"ரூ.2.60 கோடியில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள்'

தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன் ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன் ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு பொறுப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியது: கூட்டுப் பண்ணையத் திட்டமானது தமிழக அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்று. வேளாண்மைத் துறை மூலம் 225 உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.23.19 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் கூட்டுக் கொள்முதல் செய்யப்பட்டது. அத்துடன் 45 உழவர் உற்பத்தியாளர் குழுவும், தோட்டக்கலைத் துறை மூலம் 27 உழவர் உற்பத்திக் குழுவும் தொடங்கப்பட்டு, குழு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் என தொகுப்பு நிதியில் ரூ.3.60 லட்சத்துக்கு டிராக்டர், பவர்டிரில்லர், களையெடுக்கும் கருவிகள், கதிரடிக்கும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் போன்ற வேளாண் கருவிகளை வாங்கி, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 
நிகழாண்டில் 260 உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் பங்குத் தொகையை செலுத்தி வங்கிக் கணக்கை தொடங்கி உள்ளனர். மேலும், வேளாண்மைத் துறையின் மூலம் 52 உழவர் ஆர்வலர் குழுத் தொடங்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன் ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படும் என்றார். 
இதில்  வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், தோட்டக்கலை அலுவலர் வானிலரசு, கூட்டுப்பண்ணையத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments